Posts

Image
ஏணிகள் கவனத்திற்கு . . . அவர்களுக்கு இந்த தோள்கள் தேயையில்லை தலை சாய மடிகள் வந்துவிட்டன தனிமை போக்க நான் தேவையில்லை தலைகோத கரங்கள் வந்துவிட்டன கண்ணீர் துடைக்க என் விரல்கள் தேவையில்லை கண்கள் களவாடப்பட்டுவிட்டன அறிவுரை கூற ஆள் தேவைப்படவில்லை அழகான வாழ்க்கை ஆகிவிட்டன நாட்கள்  உதவிக்கு அழைக்க நான் தேவையில்லை உறவுகள் உதவ ஆரம்பித்துவிட்டன  உனக்கென்ன பெரிய உரிமை உண்டு  புது வரவு கேட்கத்தொடங்கி விட்டன  எனக்குத்தான் இது துரோகம்  அவர்களுக்கு இது வளர்ச்சி  ஆம் அவர்கள் வளர்ந்துவிட்டார்கள்  விலகி இருந்து வாழ தொடங்கிவிட்டேன்  சுவரில் ஏற மட்டுமே ஏணிகள்  அவை சுவரை தாண்டி செல்வதில்லை 
Image
முதல் வெற்றி   உன் இஷ்டப்பட்டவை உன்னை உதறிச்செல்லும் முன் அனுபவம் இல்லாத முகங்கள் புன்னகைக்கும் உன்னை எதிர்பார்த்த இதயங்கள் உன்மீது கல்வீசும் வாழ வழி தேடி வீழ்ந்துபோவாய் அடுத்தவர் இன்பம் கண்டு எரிச்சல் அடைவாய் உன்னவர் முன்னேற்றம் கண்டு கண்ணீர் விடுவாய் காலத்தின் மாற்றம் கண்டு விதியை வைவாய் நேரத்தின் ஆழம் அறியாது கடந்துபோவாய் உதவிகள் தேடிவருகையில் வெறுப்படைவாய் நம்புவது யாரை என்று நொந்துபோவாய் தனிமையை துணையாக்கி கொள்வாய் உனக்குள்ளே மூன்றாம் குரல் ஒலிக்கும் அதை அடக்க நினைத்து நீ அடங்கி போவாய் எந்த முயற்சியும் எதிராய் பேசும் அடுத்த அடிக்கு பாதம் நகராது பயம் சூழும் உலகமே தனியாய் சுழலும் வாழ்க்கை தத்துவங்கள் அனுபவிப்பாய் மரணத்தின் உண்மை விளங்கும் எதிர்கால முற்றுப்புள்ளிlக்குள் மூளை சுருங்கும் உன் மூச்சின் அவசியம் மறந்துவிடும் விலகினால் போதும் என்று விடை எடுப்பாய் சுய முயற்சியில் உயிரை மாய்ப்பாய் இறுதியில் கடிதம் உன் குரல் கூறும் கருவை பெற்றவள் கதறி அழுவாள் கருவை காத்தவன் கண்ணீர் சுரப்பான் நீ மட்டும் கனவோடு வாழ்ந்திருப்பாய்

யாழினிது குழலினிது ...குறும்பட உருவாக்கமும் பின்னணியும் - 3

Image
யாழினிது குழலினிது ...குறும்பட உருவாக்கமும் பின்னணியும் - 3 நான் மீண்டும் நாடு திரும்பியதும், படத்தின் நீளத்தை குறைக்கும் பணியில் இறங்கினேன், ஆனாலும் சரியாக முடிக்க முடியாத காரணத்தினால் திரையில் கதைசொல்லும் வழியினை மாற்றி அமைத்தேன், அது ப்ளஷ்பக் எனப்படும் முன்பு நடந்த கதையை கூறும் பாணி, அந்த முறையில் படத்தொகுப்பினை செய்து இயக்குனருக்கு அனுப்பியிருந்தேன், அது அவருக்கும் பிடித்துபோயிருந்ததனால் அதனை யு டியுப் இல் பதிவேற்றம் செய்தோம்... ஆனாலும் பல காட்சிகள் வெட்டி எறியப்பட்டது கொஞ்சம் வருத்தமாகவே இருந்தது. விரைவில் அந்த வெட்டப்பட்ட காட்சிகள் பதிவேற்றம் செய்யப்படும். படத்திற்கும் ஓரளவு வரவேற்ப்பு கிடைத்தது, மகிழ்ச்சியை தந்தது. இந்த படத்தில்  பணியாற்றிய அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள். இயக்குனரின் அடுத்த படைப்பான "பொம்மி" குறும்படம் வெளிவர இருக்கின்றது. அவருக்கு எமது வாழ்த்துக்களும். -நன்றி-

யாழினிது குழலினிது ...குறும்பட உருவாக்கமும் பின்னணியும் - 2

Image
யாழினிது குழலினிது ...குறும்பட உருவாக்கமும் பின்னணியும் - 2 https://www.youtube.com/watch?v=2ex2NGoHpmw&list=UUUfw9QZHm0goCQD5Xu_LRHw இல்லைட, நான் எதிர்பார்த்த நடிப்பு என்னால வாங்க முடியல, நா வேணும்னா செலவான தொகையை என்னோட கவிதை புத்தக வெளியீட்டுக்கு வச்சிருக்கிற காசில இருந்து தந்திறேன், இல்லன்ன நீயே இயக்கு நு சொன்னார் இயக்குனர். எல்லாம் சரியா இருக்குனு ஆரம்பிச்ச படம் நிற்க  கூடாதுன்னு  எல்லாரும் சேர்ந்தே சமாதானப்படுத்தினோம்... எனக்கு படம் வேணும், நீதான் எடுக்கணும் நு கண்டிப்பா சொன்னேன். அடுத்த காட்சிகள் படமாக்கப் பட்டன. சின்ன சின்ன மனஸ்தாபங்கள், பல நகைச்சுவை சம்பவங்கள் என்று படப்பிடிப்பு தொடர்ந்தது. இரவில் எமது தங்கும் அறையில் இரவு படப்பிடிப்பில் நகைச்சுவை சம்பவங்களுக்கு அளவேயில்லை. படப்பிடிப்பில் சில அசம்பாவிதங்களும் ஏற்ப்பட்டன. இருந்தும் ஒருவாறு படப்பிடிப்புகள் பூர்த்தியானது. சந்துரு வீட்டில் படத்தொகுப்பு வேலைகள் ஆரம்பமானது. பொதுவாக 7 மணியளவில் ஆரம்பித்து 1 மணி வரை இடம்பெறும். படத்தொகுப்பு நிறைவு பெற்று, தலைப்பிற்கான வரைகலை ஷங்கர் நிறைவு செய்ய , பின்னணி இசை மற்றும்,

யாழினிது குழலினிது ...குறும்பட உருவாக்கமும் பின்னணியும் - 1

Image
யாழினிது குழலினிது ...குறும்பட உருவாக்கமும் பின்னணியும் - 1 https://www.youtube.com/watch?v=Zw1g72S0O3k இந்தியா விட்டு வாரதுக்குள்ள ஒரு குறும்படம் செய்யலாம் என்று ஒரு சிந்தனை. இதனை விக்னேஷிடம் (இயக்குனர்) சொல்லி ஒரு கருப்பொருள் யோசிச்சு சொல்லு, நானும் யோசிக்கிறேன்னு சொல்லி 2 பேரும் ஒவ்வொரு கருப்பொருட்களை எடுத்தோம். விக்னேஷ் சொன்ன விஷயமும் , நான் யோசிச்சதும் ஒரே கருப்பொருள்தான். காட்சிகள் ஒழுங்குபடுத்தப்பட்டு கதை தயாரானது. குறை நிறைகள் திருத்தங்கள் அலைபேசியில் சரிசெய்யப்பட்டன. திரைக்கதை , வசனங்கள்  எழுதப்பட்டு மீண்டும் சரிபார்க்கப்பட்டது. உதவி இயக்குனர் கார்த்திக் உதவியுடன் கதை தயாரானது (நகைச்சுவை வசனமாக இன்னொரு கதை உருவானது தனிக்கதை). தலைப்பு என் விருப்பப்படி வைக்கப்பட்டது, அதற்க்கு சில எதிர்கருத்துக்களும் வந்தபோதும் எனக்கு மாற்றம் செய்ய விருப்பமில்லை . நடிகர்கள் தெரிவு முதலில் எமது நட்பு வட்டத்திலே இடம்பெற்று (சதீஷ்) பின்பு நடிப்பில் ஆர்வமானவர்கள் (புவனேஷ்) தெரிவுசெய்யப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டது.  வழக்கமான 2 பிரச்சனைகள், 1. செலவுகள் 2. பெண் கதாப்பாதிரங்களுக்கு நடிகைகள்
Image
பாதி நுற்றாண்டுகளின் பின்பு இன்று திருவள்ளுவர் ஆடவர் விடுதி...   இந்தியாவின் 7 ஆவது சிறந்த பல்கலைக்கழகமாக இருக்கின்ற சென்னைப் பல்கலைக்கழகத்தின் திருவள்ளுவர் ஆடவர் விடுதியானது அண்மையில் 50 ஆவது ஆண்டினை நிறைவேற்றியது. இந்த விடுதியில் தங்கியிருக்கும் பல்வேறுபட்ட மாணவர்களின் விடுதி சார்பான மனநிலை எப்படி இருக்கின்றது என்பது பற்றி வினாவியபோது அவர்கள் ஒவ்வொருவரும் நாள்தோறும் சந்திக்கின்ற பிரச்சனைகளும் வெளியே வர ஆரம்பித்தது.  50 ஆண்டுகள் பழமை வாய்ந்த விடுதி... தொலைதூரத்திலிருந்து வந்து தங்கும் மாணவர்கள்... கடல் கடந்தும், உறவுகளை தொலைவில் விட்டும் வந்த மனிதர்கள்... வேறுபட்ட மனநிலையில் வாழும் மாணவர்கள்...  என்று பல்வேறுபட்ட மனிதர்கள் வாழ்கின்ற இடங்களில் பொதுவாக பல பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். அனால் அடிப்படையாகவே எல்லோரும் சந்திக்கின்ற பிரச்னைகள் பல ஒன்றாக குவிந்து கிடக்கின்றன இங்கே.   பொதுவாக மாணவர்கள் கூறிய கருத்துக்களாக ...  • தொற்றுநோய்கள்  • இடப்பற்றாக்குறை  • நிர்வாக சீர்கேடு  • அமைவிடம்  • இணைய வசதியின்மை  •படிப்பதற்கான வசதியின்மை  • உடற்பயிற்சி மைய

சிறுகளத்தூர் கிராமம்

Image
சிறுகளத்தூர் கிராமம் தாம்பரத்திலிருந்து புறப்பட்ட சிறுகளத்தூர் நோக்கி ஆரம்பமானது பயணம். சுமார் ஒன்றரை மணிநேர பயணத்தில் குன்றதுரை வந்தடைந்தேன். அங்கிருந்து சிறிது துரத்தில் அமைந்திருந்தது சிறுகளத்தூர் கிராமம்.  சிறுகளத்தூர் என்பது குன்றத்தூர் தாலுக்காவில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். காஞ்சிபுர மாவட்டத்தில் இருக்கின்ற இந்த கிராமம் சென்னை மாநகரத்திலிருந்து 20 கி.மீ உள்ளாக அமைந்துள்ளது. வயல் நிலம், மரங்கள் படர்ந்த தெருக்கள், பசுச்சாணம் வாசம் வீசும் மண்மேடுகள், எல்லை கூட போடப்படாத வீட்டு வளவுகள், ஈரம் கசிந்த வயல் நிலங்கள் என்று நகரத்தார் பாரதிராஜா படத்தில் பார்க்ககூடிய அழகியல் காட்சிகள் நிறைந்த ஒரு சிறிய கிராமம்.  இங்கு வாழ்கின்ற மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் மற்றும் ஆடு, மாடு வளர்ப்பு காணப்படுகின்றது. இங்கு காணப்படுகின்ற வீடுகளில் பாதிக்குப்பாதி ஓலையால் வேயப்பட்ட களிமண் வீடுகளும், சீமெந்து கல் வீடுகளும் காணப்படுகின்றன. ஒவ்வொரு வீட்டிலும் அதிகம் மூன்றுபேர் மட்டும் தங்கமுடியும் ஆனால், ஒவ்வொரு வீட்டிற்கும் தல நான்கிலிருந்து ஐந்துபேர் வரை வசித்து வருகின்றனர். வீடுச்சுவ