Posts

Showing posts from April, 2016
Image
ஏணிகள் கவனத்திற்கு . . . அவர்களுக்கு இந்த தோள்கள் தேயையில்லை தலை சாய மடிகள் வந்துவிட்டன தனிமை போக்க நான் தேவையில்லை தலைகோத கரங்கள் வந்துவிட்டன கண்ணீர் துடைக்க என் விரல்கள் தேவையில்லை கண்கள் களவாடப்பட்டுவிட்டன அறிவுரை கூற ஆள் தேவைப்படவில்லை அழகான வாழ்க்கை ஆகிவிட்டன நாட்கள்  உதவிக்கு அழைக்க நான் தேவையில்லை உறவுகள் உதவ ஆரம்பித்துவிட்டன  உனக்கென்ன பெரிய உரிமை உண்டு  புது வரவு கேட்கத்தொடங்கி விட்டன  எனக்குத்தான் இது துரோகம்  அவர்களுக்கு இது வளர்ச்சி  ஆம் அவர்கள் வளர்ந்துவிட்டார்கள்  விலகி இருந்து வாழ தொடங்கிவிட்டேன்  சுவரில் ஏற மட்டுமே ஏணிகள்  அவை சுவரை தாண்டி செல்வதில்லை 
Image
முதல் வெற்றி   உன் இஷ்டப்பட்டவை உன்னை உதறிச்செல்லும் முன் அனுபவம் இல்லாத முகங்கள் புன்னகைக்கும் உன்னை எதிர்பார்த்த இதயங்கள் உன்மீது கல்வீசும் வாழ வழி தேடி வீழ்ந்துபோவாய் அடுத்தவர் இன்பம் கண்டு எரிச்சல் அடைவாய் உன்னவர் முன்னேற்றம் கண்டு கண்ணீர் விடுவாய் காலத்தின் மாற்றம் கண்டு விதியை வைவாய் நேரத்தின் ஆழம் அறியாது கடந்துபோவாய் உதவிகள் தேடிவருகையில் வெறுப்படைவாய் நம்புவது யாரை என்று நொந்துபோவாய் தனிமையை துணையாக்கி கொள்வாய் உனக்குள்ளே மூன்றாம் குரல் ஒலிக்கும் அதை அடக்க நினைத்து நீ அடங்கி போவாய் எந்த முயற்சியும் எதிராய் பேசும் அடுத்த அடிக்கு பாதம் நகராது பயம் சூழும் உலகமே தனியாய் சுழலும் வாழ்க்கை தத்துவங்கள் அனுபவிப்பாய் மரணத்தின் உண்மை விளங்கும் எதிர்கால முற்றுப்புள்ளிlக்குள் மூளை சுருங்கும் உன் மூச்சின் அவசியம் மறந்துவிடும் விலகினால் போதும் என்று விடை எடுப்பாய் சுய முயற்சியில் உயிரை மாய்ப்பாய் இறுதியில் கடிதம் உன் குரல் கூறும் கருவை பெற்றவள் கதறி அழுவாள் கருவை காத்தவன் கண்ணீர் சுரப்பான் நீ மட்டும் கனவோடு வாழ்ந்திர...