யாழினிது குழலினிது ...குறும்பட உருவாக்கமும் பின்னணியும் - 2

யாழினிது குழலினிது ...குறும்பட உருவாக்கமும் பின்னணியும் - 2



https://www.youtube.com/watch?v=2ex2NGoHpmw&list=UUUfw9QZHm0goCQD5Xu_LRHw


இல்லைட, நான் எதிர்பார்த்த நடிப்பு என்னால வாங்க முடியல, நா வேணும்னா செலவான தொகையை என்னோட கவிதை புத்தக வெளியீட்டுக்கு வச்சிருக்கிற காசில இருந்து தந்திறேன், இல்லன்ன நீயே இயக்கு நு சொன்னார் இயக்குனர். எல்லாம் சரியா இருக்குனு ஆரம்பிச்ச படம் நிற்க  கூடாதுன்னு  எல்லாரும் சேர்ந்தே சமாதானப்படுத்தினோம்... எனக்கு படம் வேணும், நீதான் எடுக்கணும் நு கண்டிப்பா சொன்னேன். அடுத்த காட்சிகள் படமாக்கப் பட்டன.

சின்ன சின்ன மனஸ்தாபங்கள், பல நகைச்சுவை சம்பவங்கள் என்று படப்பிடிப்பு தொடர்ந்தது. இரவில் எமது தங்கும் அறையில் இரவு படப்பிடிப்பில் நகைச்சுவை சம்பவங்களுக்கு அளவேயில்லை. படப்பிடிப்பில் சில அசம்பாவிதங்களும் ஏற்ப்பட்டன. இருந்தும் ஒருவாறு படப்பிடிப்புகள் பூர்த்தியானது. சந்துரு வீட்டில் படத்தொகுப்பு வேலைகள் ஆரம்பமானது. பொதுவாக 7 மணியளவில் ஆரம்பித்து 1 மணி வரை இடம்பெறும். படத்தொகுப்பு நிறைவு பெற்று, தலைப்பிற்கான வரைகலை ஷங்கர் நிறைவு செய்ய , பின்னணி இசை மற்றும், ஒலிப்பதிவு போன்றன இடம்பெற்று ஏறத்தாழ 14 நிமிடங்கள் ஓடும் படமாக வெளிவந்தது. ஆனாலும் பல குறும்பட விழாக்கள் 10 நிமிடத்திற்குள் கேட்பதனால் மாற்றி அமைக்கவேண்டிய தேவை இருந்தது. ஆனால் நான் நாடு திரும்ப வேண்டி இருந்ததனால் அந்த 14 நிமிட பிரதியுடன் நிறுத்திகொண்டோம்.


தொடரும்... 

Comments

Popular posts from this blog

Bommarillu - Love makes life beautiful -