யாழினிது குழலினிது ...குறும்பட உருவாக்கமும் பின்னணியும் - 3
யாழினிது குழலினிது ...குறும்பட உருவாக்கமும் பின்னணியும் - 3 நான் மீண்டும் நாடு திரும்பியதும், படத்தின் நீளத்தை குறைக்கும் பணியில் இறங்கினேன், ஆனாலும் சரியாக முடிக்க முடியாத காரணத்தினால் திரையில் கதைசொல்லும் வழியினை மாற்றி அமைத்தேன், அது ப்ளஷ்பக் எனப்படும் முன்பு நடந்த கதையை கூறும் பாணி, அந்த முறையில் படத்தொகுப்பினை செய்து இயக்குனருக்கு அனுப்பியிருந்தேன், அது அவருக்கும் பிடித்துபோயிருந்ததனால் அதனை யு டியுப் இல் பதிவேற்றம் செய்தோம்... ஆனாலும் பல காட்சிகள் வெட்டி எறியப்பட்டது கொஞ்சம் வருத்தமாகவே இருந்தது. விரைவில் அந்த வெட்டப்பட்ட காட்சிகள் பதிவேற்றம் செய்யப்படும். படத்திற்கும் ஓரளவு வரவேற்ப்பு கிடைத்தது, மகிழ்ச்சியை தந்தது. இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள். இயக்குனரின் அடுத்த படைப்பான "பொம்மி" குறும்படம் வெளிவர இருக்கின்றது. அவருக்கு எமது வாழ்த்துக்களும். -நன்றி-