சிறுகளத்தூர் கிராமம்
சிறுகளத்தூர் கிராமம் தாம்பரத்திலிருந்து புறப்பட்ட சிறுகளத்தூர் நோக்கி ஆரம்பமானது பயணம். சுமார் ஒன்றரை மணிநேர பயணத்தில் குன்றதுரை வந்தடைந்தேன். அங்கிருந்து சிறிது துரத்தில் அமைந்திருந்தது சிறுகளத்தூர் கிராமம். சிறுகளத்தூர் என்பது குன்றத்தூர் தாலுக்காவில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். காஞ்சிபுர மாவட்டத்தில் இருக்கின்ற இந்த கிராமம் சென்னை மாநகரத்திலிருந்து 20 கி.மீ உள்ளாக அமைந்துள்ளது. வயல் நிலம், மரங்கள் படர்ந்த தெருக்கள், பசுச்சாணம் வாசம் வீசும் மண்மேடுகள், எல்லை கூட போடப்படாத வீட்டு வளவுகள், ஈரம் கசிந்த வயல் நிலங்கள் என்று நகரத்தார் பாரதிராஜா படத்தில் பார்க்ககூடிய அழகியல் காட்சிகள் நிறைந்த ஒரு சிறிய கிராமம். இங்கு வாழ்கின்ற மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் மற்றும் ஆடு, மாடு வளர்ப்பு காணப்படுகின்றது. இங்கு காணப்படுகின்ற வீடுகளில் பாதிக்குப்பாதி ஓலையால் வேயப்பட்ட களிமண் வீடுகளும், சீமெந்து கல் வீடுகளும் காணப்படுகின்றன. ஒவ்வொரு வீட்டிலும் அதிகம் மூன்றுபேர் மட்டும் தங்கமுடியும் ஆனால், ஒவ்வொரு வீட்டிற்கும் தல நான்கிலிருந்து ஐந்துபேர் வரை வசித்து வருகின்றனர். ...