யாழினிது குழலினிது ...குறும்பட உருவாக்கமும் பின்னணியும் - 1

யாழினிது குழலினிது ...குறும்பட உருவாக்கமும் பின்னணியும் - 1


https://www.youtube.com/watch?v=Zw1g72S0O3k


இந்தியா விட்டு வாரதுக்குள்ள ஒரு குறும்படம் செய்யலாம் என்று ஒரு சிந்தனை. இதனை விக்னேஷிடம் (இயக்குனர்) சொல்லி ஒரு கருப்பொருள் யோசிச்சு சொல்லு, நானும் யோசிக்கிறேன்னு சொல்லி 2 பேரும் ஒவ்வொரு கருப்பொருட்களை எடுத்தோம். விக்னேஷ் சொன்ன விஷயமும் , நான் யோசிச்சதும் ஒரே கருப்பொருள்தான்.

காட்சிகள் ஒழுங்குபடுத்தப்பட்டு கதை தயாரானது. குறை நிறைகள் திருத்தங்கள் அலைபேசியில் சரிசெய்யப்பட்டன. திரைக்கதை , வசனங்கள்  எழுதப்பட்டு மீண்டும் சரிபார்க்கப்பட்டது. உதவி இயக்குனர் கார்த்திக் உதவியுடன் கதை தயாரானது (நகைச்சுவை வசனமாக இன்னொரு கதை உருவானது தனிக்கதை). தலைப்பு என் விருப்பப்படி வைக்கப்பட்டது, அதற்க்கு சில எதிர்கருத்துக்களும் வந்தபோதும் எனக்கு மாற்றம் செய்ய விருப்பமில்லை . நடிகர்கள் தெரிவு முதலில் எமது நட்பு வட்டத்திலே இடம்பெற்று (சதீஷ்) பின்பு நடிப்பில் ஆர்வமானவர்கள் (புவனேஷ்) தெரிவுசெய்யப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டது.  வழக்கமான 2 பிரச்சனைகள்,
1. செலவுகள்
2. பெண் கதாப்பாதிரங்களுக்கு நடிகைகள்

செலவு பெரிதாக வராதவாறு பார்த்க்கொண்டோம், இருந்தும் செலவுகள் அதிகரித்ததால் என்னுடன் சேர்த்து இயக்குனரும் , மகேஷ் அண்ணாவும் தயாரிப்பில் இணைந்துகொண்டனர். தொழில்நுட்ப பிரிவில்  ஸ்ரீராம் , ஷாஹித், ஜிஜு, அரவிந்த், பிரபு, - ஒளிப்பதிவில் பணியாற்ற, நானும் சந்துருவும் படத்தொகுப்பை கவனித்துகொண்டோம். உதவி இயக்கத்தினை ஸ்ரீ தேவும் , ரகுபதியும் பார்த்துக்கொண்டனர். எமது தாங்கும் அறை, நண்பனின் அலுவலகம், சிறுவர் பூங்கா, நண்பனின் வீடு என்று படப்பிடிப்பு இடங்கள் தெரிவுசெய்யப்பட்டு முதலாம் நாள் படப்பிடிப்பு தொடங்கியது...

முதல் நாள் படப்பிடிப்பு முடிந்ததும் , விக்னேஷ் என்னிடம் "குறும்படத்தை நிறுத்திடலாம் " நு சொன்னார்...

தொடரும் ...

Comments

Popular posts from this blog

Bommarillu - Love makes life beautiful -