ஏணிகள் கவனத்திற்கு . . .





அவர்களுக்கு இந்த தோள்கள் தேயையில்லை
தலை சாய மடிகள் வந்துவிட்டன
தனிமை போக்க நான் தேவையில்லை
தலைகோத கரங்கள் வந்துவிட்டன
கண்ணீர் துடைக்க என் விரல்கள் தேவையில்லை
கண்கள் களவாடப்பட்டுவிட்டன
அறிவுரை கூற ஆள் தேவைப்படவில்லை
அழகான வாழ்க்கை ஆகிவிட்டன நாட்கள் 
உதவிக்கு அழைக்க நான் தேவையில்லை
உறவுகள் உதவ ஆரம்பித்துவிட்டன 
உனக்கென்ன பெரிய உரிமை உண்டு 
புது வரவு கேட்கத்தொடங்கி விட்டன 
எனக்குத்தான் இது துரோகம் 
அவர்களுக்கு இது வளர்ச்சி 
ஆம் அவர்கள் வளர்ந்துவிட்டார்கள் 
விலகி இருந்து வாழ தொடங்கிவிட்டேன் 
சுவரில் ஏற மட்டுமே ஏணிகள் 
அவை சுவரை தாண்டி செல்வதில்லை 

Comments

Popular posts from this blog

Bommarillu - Love makes life beautiful -