Posts

Showing posts from June, 2013
Image
பாதி நுற்றாண்டுகளின் பின்பு இன்று திருவள்ளுவர் ஆடவர் விடுதி...   இந்தியாவின் 7 ஆவது சிறந்த பல்கலைக்கழகமாக இருக்கின்ற சென்னைப் பல்கலைக்கழகத்தின் திருவள்ளுவர் ஆடவர் விடுதியானது அண்மையில் 50 ஆவது ஆண்டினை நிறைவேற்றியது. இந்த விடுதியில் தங்கியிருக்கும் பல்வேறுபட்ட மாணவர்களின் விடுதி சார்பான மனநிலை எப்படி இருக்கின்றது என்பது பற்றி வினாவியபோது அவர்கள் ஒவ்வொருவரும் நாள்தோறும் சந்திக்கின்ற பிரச்சனைகளும் வெளியே வர ஆரம்பித்தது.  50 ஆண்டுகள் பழமை வாய்ந்த விடுதி... தொலைதூரத்திலிருந்து வந்து தங்கும் மாணவர்கள்... கடல் கடந்தும், உறவுகளை தொலைவில் விட்டும் வந்த மனிதர்கள்... வேறுபட்ட மனநிலையில் வாழும் மாணவர்கள்...  என்று பல்வேறுபட்ட மனிதர்கள் வாழ்கின்ற இடங்களில் பொதுவாக பல பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். அனால் அடிப்படையாகவே எல்லோரும் சந்திக்கின்ற பிரச்னைகள் பல ஒன்றாக குவிந்து கிடக்கின்றன இங்கே.   பொதுவாக மாணவர்கள் கூறிய கருத்துக்களாக ...  • தொற்றுநோய்கள்  • இடப்பற்றாக்குறை  • நிர்வாக சீர்கேடு  • அமைவிடம்  • இணைய வசதியின்மை...