Posts

Showing posts from January, 2012

9 ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா

Image
9 ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா இந்திய திரைப்பட திறனாய்வுக் கழகத்தினால் [ICAF] 2003 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சென்னை சர்வதேச திரைப்படவிழா   [CIFF] கடந்த ஆண்டு மார்கழி   2011 ல் தனது 9  ஆவது ஆண்டினை பூர்த்திசெய்தது. மார்கழி 14  ஆம் திகதியிலிருந்து 22  ஆம் திகதி வரை நடைபெற்ற இந்த விழாவில் 53  நாடுகளிருந்து 156  திரைப்படங்கள் ; உட்லண்ட்ஸ் , சிம்பனி உட்லண்ட்ஸ் , சத்யம் , ஐநாக்ஸ் மற்றும் திரைப்பட சங்கம் ஆகிய ஐந்து திரைகளில் திரையிடப்பட்டன. விழாவின் சுவாரசிய சம்பவங்கள். ஆரம்ப நாள் ·          நடிகர் இயக்குனர் ரா.பார்த்திபன் , நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விழா ஆரம்பமானது. ·          நடிகைகள் தன்ஷிகா , கார்த்திகா , ப்ரியா ஆனந்த் மங்கள விளக்கேற்றினர். ·          செய்தித்துறை அமைச்சர் திரு கே.டி. ராஜேந்திர பாலாஜி சிறப்பு விருந்தினராக அழ...

அவளுக்காக ஒரு வேண்டுதல்...

Image
அவளுக்காக ஒரு வேண்டுதல்... முதல் பார்வையில் பூத்த காதலை வாடாமல் வளர்க்க ஆசைப்பட்டேன் நட்புக்கன்றை அவள் நீட்ட உரமாக்கினேன் என் முதல் பூவை... காலம் பல ஓடியதும் காதல் அவளுக்குள்ளும் ஊறியது உரமாக நானிட்ட காதல் மரமாகிப்போனது அவள் மனதில்... ஊர்க்காதல் கதிகண்டு உறங்கிப்போனது எந்தன் பசி காதல் என்றால் சிறை என்று பதிவாகிப்போனது எந்தன் விதி... காதல் பசியினைபார்த்தே பயந்துபோன எனக்கு காதல் கனிகளுடன் வரவேற்றது சோலை... அவள் காதல் கனி நீட்ட பசியில்லை என நான்கூற உற்றார்மீது எனக்கு காதல் – என்று ஊமையாக சாபமிட்டாள்... என்ன நிலமை உனக்கும் வரும் அப்போது வலிதெரியும் நட்புக்கூட நமக்குள் வேண்டாம் எட்ட நின்று ஏமாந்துபோ என்றாள்... பாவம் அவள் மனது பல ஆண்டு காதல் இல்லையா அவளின் அடுத்த மரமாவது தோப்பாக அவளுக்காக ஒரு வேண்டுதல்... - நீங்கள் -

எனது குறும்படம் " ஜூன் 26 "

Image
எனது குறும்படம் " ஜூன் 26 " பார்ப்பதற்கு....  :    https://www.facebook.com/photo.php?v=235542286467026

9 ஆவது சென்னை உலக திரைப்பட விழாவில் என்னை திருடிய திரைப்படம்...

Image
9  ஆவது சென்னை உலக திரைப்பட விழாவில் என்னை திருடிய திரைப்படம்... படம் - மலை களின்  வர்ணங்கள் இயக்குனர்   –  கார்லோஸ்  சீசர் ஆர்பெலஸ் நாடு - கொலம்பியா மொழி -ஸ்பானிஷ்  போர் பற்றி எதுவுமே அறிந்திராத குழந்தைப்பருவத்தில் , அக்காலங்களில் குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை பிரதிபலித்திருக்கும் படம்தான் இந்த " மலைகளின் வர்ணங்க ள்" [THE COLOURS OF THE MOUNTAIN ] மனுவல் என்ற சிறுவன் கொலம்பியாவில் ஒரு கிராமத்தில் வசித்துவருகிறான். அவனுக்கு கால் பந்து வீரனாக வரவேண்டும் என்று ஆசை. கிழிந்துபோயிருக்கும் பந்தை வைத்து விளையாடிக்கொண்டிருக்கும் மனுவலுக்கு அவன் தந்தை பிறந்த நாள் பரிசாக ஒரு புதிய கால்பந்தை கொடுக்கிறார். அந்த பந்து ஒருதடவை விளையாடுகையில் கண்ணிவெடி புதைக்கப்ட்டிருகும் நிலத்தில் விழுந்துவிடுகிறது... இதற்கிடையில் குடும்பத்தின் ஆண்களை கொன்று , பெண்களை வல்லுறவுக்கு உட்ட்படுத்திவரும் இராணுவத்திடம் மனுவலின் தந்தை , தாய் , ஆசிரியர் இரையாகின்றனர். இதுபற்றி ஏதும் அறிந்திராத மனுவெலிற்கு அந்த கால்ப...