Posts

Showing posts from October, 2012

மாற்றுத்திறனாளி

Image
மாற்றுத்திறனாளி வழக்கமாக களைகட்டுகின்ற சேப்பாக்கம் ரயில் நிலையம் அன்று மதிய நேரம் களையிழந்து காணப்பட்டது. யாரோ சிலரின் ஆதரவில் ரயில் இயங்கிக்கொண்டிருந்தது போல இருந்தது. வேளச்சேரிக்கு செல்கின்ற பக்கத்தில் இருக்கின்ற மின் ஏணி வழக்கம்போல நிறுத்தப்பட்டிருந்தது. அது திருத்தப்படுவது போன்று ஒன்றரை வருடமாக பாவனை காட்டப்பட்டிருந்தது. எழிலகத்தின் அருகிலிருந்து இருவர் ரயில் சீட்டை வாங்கிக்கொண்டு மின்தூக்கி நோக்கி சென்றனர். அவர்கள் இருவரில் ஒருவர் மாற்றுத்திறனாளி. அவர்கள் மின் தூக்கியை நோக்கி  செல்கையில்  அவர்கள் இந்த இடத்திற்கு புதியவர்கள் என்று தெரிந்து கொள்ள முடிந்ததது. ஏனெனில் அந்த மின்தூக்கி வெகுநாட்களாக மூடப்பட்ட அறையாகவே காட்சியளிக்கின்றது. அவர்கள் இருவரையும் பின்தொடர்ந்து சென்றேன். அவர்கள் படியேற சிரமப்பட்டனர். இதனால் சென்னை கடற்கரைவரை செல்கின்ற பக்கத்து மின்தூக்கியில் ஏறிச்சென்று மேல்தளத்தில் தளத்தை அடைந்த்தனர் அதன் பின்னர் அந்தப்பகுதியிலிருந்து  எதிர்த்திசையிலிருக்கும் வேளச்சேரிவரை செல்கின்ற பக்கத்திற்கு பாதுகாப்பற்ற வழித்தடத்தில் அந்த மாற்றுத்திறனாளி மிகுந்...