Posts

Showing posts from March, 2012

கலாட்டா with கார்த்திக்

Image
கலாட்டா with  கார்த்திக் கல்லுரி நண்பன் கார்த்திக் உடன் ஒரு சந்திப்பு  " கலாய்க்காதடா , என்னையாட இன்டர்வியு பண்ணப்போற "  என்ற கேள்வியோடு ஆரம்பமானது கார்த்திக்குடனான சந்திப்பு . சார் பிறந்தது கும்பகோணத்தில இருக்கிற வீரசோழபுரம் . அப்பா முருகன் , பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பவர் . சார் சின்னவயசில செய்யாத சேட்டை இல்லை , குட்டி ரவுடினே சொல்லலாம் . இவருக்கு சின்ன வயசில பைலேட் ஆகணும்னு ஆசை .   சாருக்கு கோலி ஆடுறதினா உயிர் . வாலிபால் , கொக்கோ , துரோபால் எல்லாம் ஸ்கூல் லெவெல்ல ஆடியிருக்காரு . பைக் ரேசிங்ல கிங் . காலேஜ் படிக்கிறப்போ டூர் போனதால வயநாடு , கோழிக்கோடுனா கொஞ்சம் இஷ்டம் . விஸ்காம் படிச்சதால போட்டோகிரபி , குறும்படம்னு பல இடம் சுத்தியிருக்கிறது மட்டுமல்லாமல் " சுனாமி " னு ஒரு குறும்படம் பண்ணியிருக்காரு . 3dx max  சாப்ட்வேர் ல பலே கில்லாடி . விஜய் டிவினா , டிவி முன்னாடியே உட்காந்திடுவாரு . கனா காணும் காலங்கள் , கலக்கபோவது யாரு , நீயா நானானு இவரோட பேவரிட்ட அடுக்கிட்டே போகலாம் . வ...

பெண்ணின் வெற்றிக்குப்பின்னாலே நிச்சயமாக ஆண் இருக்கவேண்டும்

Image
பெண்ணின் வெற்றிக்குப்பின்னாலே நிச்சயமாக ஆண் இருக்கவேண்டும் மகளிர் தின விழாவில் பி . சுசீலா பேச்சு மார்ச் 8 சென்னைப்பல்கலைக்கழகத்தில் நடந்த உலக மகளிர் தின சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட பாடகி பி . சுசீலா அவர்கள் பேசுகையில் ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப்பின்னும் ஆண் கண்டிப்பாக இருப்பான் , அது அண்ணனாகவோ இல்லை , அப்பாவாகவோ இருக்கலாம் . ஆணின் வழிகாட்டல் பெண்ணுக்கு அவசியம் என்று கூறினார் . 3 ஆவது முறையாக சென்னைப்பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழா 11 மணியளவில் ஆரம்பித்தது . சிறப்பு விருந்தினராக பாடகி பி . சுசீலா அழைக்கப்பட்டிருந்தார் . துணைவேந்தர் திருவாசகம் அவர்களின் சிறப்பு உரையில் 60 , ௦௦௦ பாடல்கள் மேல் பாடிய பாடகி சுசீலாவின் தீவிர ரசிகர் எனவும் அவர் பாடிய தமிழ்த்தாய் வாழ்த்தை ஒவ்வொரு நிகழ்ச்சியின் ஆரம்பத்திலும் பாடப்படுவதை பெருமையாக கருதுவதாக கூறினார் . சென்னையில் ஆண்களுக்கு நிகராக சாதித்த ஐந்து பெண்க...

எத்தனை மனிதர்கள்

Image
எத்தனை மனிதர்கள் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஒரு எட்டு வயது மதிக்கத்தக்க சிறுவன் . தாய் தந்தையரை இழந்து அவனது பாட்டியுடன் தங்கிவரும் அவனது முழுநேரத்தொழில் பிச்சை எடுப்பது . வேகமாக செல்லும் வாகனங்களின் நடுவே பயமின்றி வீதியை கடக்கின்றான் . அவனது பேச்சும் செயலும் வழக்கமான பிச்சை எடுப்பவர்கள் போல் இல்லை . அவன்   பிச்சை கேட்போரின் உருவம் தராதரம் அறிந்து அவர்களை புகழ்ந்து பிச்சை கேட்கிறான் . அவன் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் பார்ப்பவர்களை எளிதில் கவர்ந்துவிடும் . அவனைப்பற்றி விசாரித்தபோது தனது பெயர் முத்துக்குமார் என்றும் தனது தந்தையின் முதல் எழுத்து "M" என்றும் பெருமையாக கூறுகிறான் . அவனது பாட்டியும் பிச்சைதான் எடுப்பதாகவும் , பள்ளிக்கு இதுவரை சென்றதில்லை எனவும் கூறுகிறான் . ஆனாலும் நடிகர் விஜயின் தீவிர ரசிகனாம் . அவரது திரைப்பட வசனங்களை அப்படியே ஒப்பிகிறான் . நடனத்திலும் வெழுத்து வாங்குகிறான் .               ...