பாதி நுற்றாண்டுகளின் பின்பு
இன்று திருவள்ளுவர் ஆடவர் விடுதி...
இன்று திருவள்ளுவர் ஆடவர் விடுதி...
இந்தியாவின் 7 ஆவது சிறந்த பல்கலைக்கழகமாக இருக்கின்ற சென்னைப் பல்கலைக்கழகத்தின் திருவள்ளுவர் ஆடவர் விடுதியானது அண்மையில் 50 ஆவது ஆண்டினை நிறைவேற்றியது. இந்த விடுதியில் தங்கியிருக்கும் பல்வேறுபட்ட மாணவர்களின் விடுதி சார்பான மனநிலை எப்படி இருக்கின்றது என்பது பற்றி வினாவியபோது அவர்கள் ஒவ்வொருவரும் நாள்தோறும் சந்திக்கின்ற பிரச்சனைகளும் வெளியே வர ஆரம்பித்தது.
50 ஆண்டுகள் பழமை வாய்ந்த விடுதி...
தொலைதூரத்திலிருந்து வந்து தங்கும் மாணவர்கள்...
கடல் கடந்தும், உறவுகளை தொலைவில் விட்டும் வந்த மனிதர்கள்...
வேறுபட்ட மனநிலையில் வாழும் மாணவர்கள்...
என்று பல்வேறுபட்ட மனிதர்கள் வாழ்கின்ற இடங்களில் பொதுவாக பல பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். அனால் அடிப்படையாகவே எல்லோரும் சந்திக்கின்ற பிரச்னைகள் பல ஒன்றாக குவிந்து கிடக்கின்றன இங்கே.
பொதுவாக மாணவர்கள் கூறிய கருத்துக்களாக ...
• தொற்றுநோய்கள்
• இடப்பற்றாக்குறை
• நிர்வாக சீர்கேடு
• அமைவிடம்
• இணைய வசதியின்மை
•படிப்பதற்கான வசதியின்மை
• உடற்பயிற்சி மையம் இன்மை
• விளையாட்டுக்களுக்கு ஏற்ற இடமின்மை
•கொசுக்களின் பரவுதலை கட்டுபடுத்துவதில்லை
• சுத்தமான நீர் வசதியின்மை
இவைபோன்று பல்வேறுபட்ட பிரச்சனைகளை கண்கூடாக காணவும் முடிந்தது.
சமூகவியல் துறை மாணவர் ஒருவரிடம் கேட்டபோது:
சமூகவியல் துறை மாணவர் ஒருவர் சிலநாட்களின் முன்பு தீராத காய்ச்சலுக்கு உள்ளாகி இருந்தார். ஒருவாரத்திற்கு மேல் அவரை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமத்தித்து இருந்தனர். அவர் பக்கத்து நாட்டினை சேர்ந்தவர். அவர் குடும்பங்களை விட்டு தனியாக இங்கு தங்கி இருப்பவர். அவர் மருத்துவமனையில் தங்கியிருக்கையில் பார்த்துக்கொள்ள நண்பர்கள் மட்டுமே இருந்தார்கள். அவரது உடல்நிலை பாதிப்புக்கு காரணம் கொசுக்களே. இந்த விடுதியை பொறுத்தவரையில் கொசுக்களின் பெருக்கமாகவே காணப்படுகிறது. தெரிந்தமட்டில் இந்த விடுதியில் டெங்கு பரவுவதற்கான வாய்ப்பு மிக அதிகமாகவே இருக்கிறது.
அறையின் வாசலுக்கு அருகிலேயே ஒரு கழிவு நீர் கால்வாய் இருக்கிறது. இது சுத்தம் செய்யப்படவே இல்லை. இதன் மூலமாக கொசுக்கள் உருவாக்குதல் அதிகமாகவே உள்ளது. இத்தனைக்கும் இது அரசாங்க விடுதி. இதனை அறிவிப்பதற்கும் யார் தலைமை நிர்வாகி என்ற குழப்பம் இருந்துவருகிறது.
பொருளியல் துறை மாணவர் ஒருவரிடம் கேட்டபோது:
சுற்றுப்புற சூழல் சுத்தமாக பராமரிக்கப்பட்டு கழிவுகள் அகற்றப்பட வேண்டும், கழிவு நீர் ஓடுவதற்கான வசதியமைப்பு செய்யப்பட வேண்டும். இவற்றை செய்தாலே ஓரளவு கொசுத்தொல்லையை குறைத்துவிடலாம். அதே போன்று கொசுக்களுக்காக அடிக்கப்படும் மருந்துகளை மாதம் தவறாது அடிப்பதன் மூலமாக முற்றாக ஒழிக்கமுடியும். சில சில அறைகளில் கொசு வலை அடிக்கப்படிருப்பது என்னால் அவதானிக்க குடியதாக இருந்தது. கொசுக்களை ஒழிப்பதன்மூலமாக தொற்று நோய்களுக்கு முற்றுபுள்ளி வைக்க முடியும்.
அண்மையில் தீபாவளியையொட்டி விடுதியில் சமையல் செய்வோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதன்போது குறிப்பிட்ட விடுமுறை நாள் கழிந்து மேலதிகமாக 3 நாட்கள் எடுக்கப்பட்டது. இதன்போது விடுதியில் இருந்த மாணவர்கள் வெளியே உணவு அருந்தவேண்டி இருந்தது. சில மாணவர்கள் உணவு விடுதி மூடியதனால் நண்பர்கள் வீட்டிற்கும் சென்றிருந்தனர். இதுபோன்று சில சமயங்களில் ஏற்படும்போது நிர்வாகம் மாணவர் பற்றி கவலைப்படுவதில்லை.
மானிடவியல் துறை மாணவர் ஒருவரிடம் கேட்டபோது:
விடுதி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் ஒருவருக்கு ஒரு அறை என்ற ரீதியில் காணப்பட்டது. ஆனால் இன்று ஒரு அறையில் கூடியது 6 பேர் வரை தங்கி வருகின்றனர். இதன் மூலமாக நிம்மதியான் உறக்கமின்மையில் ஆரம்பித்து கல்வி பயில்வதில் சிக்கல் என்று வளர்ந்து ஜாதி பிரச்சனை வரை செல்கின்றது.
ஏனெனில் வௌ;வேறு மனநிலை உள்ளவர்கள் ஒரு இடத்தில் ஒன்றாக எவ்வளவு நாள்தான் சமாளிக்க முடியும். ஒருவர் தூங்கும் போது மற்றவர் விழித்தும், மற்றவர் எழுந்ததும் இவர் துங்குவதும் என்ற நிலைகூட இருக்கின்றது. இத்தனைக்கும் இந்த விடுதியின் அமைவிடம் பற்றி சொல்வோமானால் முன்பகுதி பிரதான் வீதியை அண்மித்தும் பின் பகுதி புகையிரத நிலையத்தை அண்மித்தும் கூவம் ஆறு அருகிலும் காணப்படுகின்றது. இவை போன்ற சுற்றுப்புறத்தினால் ஆன இடத்தில் விடுதி இருப்பது எந்த வகையிலும் பொருந்தாதது. படிப்பதற்கு ஏற்ற இடமாகவும் இல்லை. சுவாசப்பிரச்சனைகளும் ஏற்ப்படுகின்றன. உணவு அருந்தும் இடத்தின் கூரை நீர் ஒழுகுவதாகவும், மேல் கூரை இடிந்தும் விழும் நிலையும் இருக்கின்றது.
மாணவருக்கு விடுதி உறுதிப்படுத்தும் போது அவர்களுக்கான அறைகள் உறுதிப்படுத்தப்படுவதில்லை.
மாணவர்கள் அதிகரிப்பிற்கு ஏற்ப மேலதிக அறைகளோ அல்லது தனிக்கட்டடமோ அமைக்கப்படவில்லை. இவை சாத்தியமல்லாத பட்சத்தில் மாணவர் அனுமதி கட்டுப்படுத்தப்படிருக்க வேண்டும். இல்லாத போது விடுதிக்குரிய தொழிற்பாடே தேவயற்றுப்போகும்.
இன்றைய நிலையை பொறுத்தவரையில் இணையதளம் முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. படிப்பிற்கும் சரி தொலைத்தொடர்புக்கும் சரி இன்றியமையாதது. முன்னதாக இருந்த இந்த இணைய வசதி இன்று இருப்பதில்லை. நிறுத்தப்பட்டு இருக்கின்றது.இணையம் இன்று மாணவர்கள் பிரதானமாக எதிர்பார்கின்ற ஒரு எதிர்பார்ப்பாகும்.
கிரிக்கட், பூப்பந்து,கரம் தவிர்ந்து எந்த ஆட்டங்களும் விளையாடப்படுவதில்லை. இவற்றின் விளையாட்டிற்கும் இடம் போதுவதில்லை. இருந்தும் பொழுது கழிப்பதற்கு அந்த சின்ன இடத்தை பயன்படுத்திக்கொள்கின்றனர்.
விடுதியில் உடற்ப்பயிற்சி செய்வது முடியாதகாரியமாகி இருப்பதனால் வெளியே காசு கொடுத்து உடற்ப்பயிற்சி செய்து வருகின்றனர் மாணவர்கள். விடுதியை பொறுத்தவரையில் உடற்ப்பயிற்சி செய்வதற்கு 3 கம்பிகள் மட்டுமே இருக்கின்றன. இதனால் மாணாவர்களுக்கு உடற்ப்பயிற்சி மையம் ஒரு தேவையாகவே இருந்துவருகின்றது.
குற்றவியல் துறை மாணவர் ஒருவரிடம் கேட்டபோது:
விடுதியின் கீழ் தளத்தினை பொறுத்தவரையில் கழிவறைகள், குளிக்குமிடங்கள், கால்வாய்கள் என்பன பராமரிப்பு மிகவும் மோசமாக இறக்கின்றன. இவற்றில் சில சமயம் நீர்வசதி தடைப்படவும் செய்கின்றது. இவை தவிர பூனை, நாய் போன்றன சமையல் அறை, தங்கும் அறை, தொலைகாட்சி அறை என்று பாராமல் உலவுகின்றன. இவற்றின் மூலமாக பரவும் நோய்கள் ஏராளம். உடைகள் அலசுவதற்கும், அவற்றினை உலர்த்துவதற்கும் வசதியான இடங்கள் இல்லை. கழிவறை, குளியலறை போன்றவற்றிற்கு மின்குமிழ்கள் அதிகமாக இல்லை. ஏன் வாசலில் கூட மின்குமிழ் ஒளிர்வதில்லை.
குடிநீரைப்பொறுத்தவரையில் பொதுவாக எல்லா அறைகளிலும் தனியாக குடிநீர் போத்தல்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஏனெனில் சமையல் அறையில் கிடைக்கும் நீர் வடிகட்டி அனுப்பப்படுகிறது இருந்தும் அதன் சுத்தம் மீது நம்பிக்கை யாருக்குமில்லை. ஏனெனில் நீர் தாங்கி சுத்தம் செய்து பல நாட்கள் ஆகியிருப்பதால் யாரும் பயன்படுத்துவதில்லை.
பொதுவாக விடுதி பிரச்சனைகள் குறைக்கப்படாமல் இருப்பதற்கு பிரதான காரணம், மானவத்தலைவர் என்றோ, செயலாளர் என்றோ யாரும் இருப்பதில்லை. இதனால் பிரச்சனைகள் எதுவும் சரியான ஆளிடம் சென்று சேர்வதில்லை. இதனால் ஒரு சரியான தலைவர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். அப்பொழுதுதான் பிரச்சனைகள் குறையும்.
மாணவர் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அடிப்படையாகவும் அவர்கள் கூறிய பதில்களையும் வைத்துகொண்டு ஒரு சிறிய வரைபு
50 ஆண்டுகள் கடந்த பின்பு இதுபோன்று பல பிரச்சனைகளை கொண்டிருப்பது நிர்வாகத்திற்கு தெரிந்த போதிலும் அவர்கள் கூறுகின்ற காரணம் மாணவர்களின் நிலுவைத்தொகை இன்னமும் நிரப்பப்படுவதில்லை. இதற்கான பிரச்சனைகளை கண்டறிந்து சுமூகமாக தீர்க்கப்பட வேண்டும்.

college la assgmt kuduththathellaam inga irukku...
ReplyDeletevera vazhi
Delete