முதல் வெற்றி
உன் இஷ்டப்பட்டவை உன்னை உதறிச்செல்லும்
முன் அனுபவம் இல்லாத முகங்கள் புன்னகைக்கும்
உன்னை எதிர்பார்த்த இதயங்கள் உன்மீது கல்வீசும்
வாழ வழி தேடி வீழ்ந்துபோவாய்
அடுத்தவர் இன்பம் கண்டு எரிச்சல் அடைவாய்
உன்னவர் முன்னேற்றம் கண்டு கண்ணீர் விடுவாய்
காலத்தின் மாற்றம் கண்டு விதியை வைவாய்
நேரத்தின் ஆழம் அறியாது கடந்துபோவாய்
உதவிகள் தேடிவருகையில் வெறுப்படைவாய்
நம்புவது யாரை என்று நொந்துபோவாய்
தனிமையை துணையாக்கி கொள்வாய்
உனக்குள்ளே மூன்றாம் குரல் ஒலிக்கும்
அதை அடக்க நினைத்து நீ அடங்கி போவாய்
எந்த முயற்சியும் எதிராய் பேசும்
அடுத்த அடிக்கு பாதம் நகராது பயம் சூழும்
உலகமே தனியாய் சுழலும்
வாழ்க்கை தத்துவங்கள் அனுபவிப்பாய்
மரணத்தின் உண்மை விளங்கும்
எதிர்கால முற்றுப்புள்ளிlக்குள் மூளை சுருங்கும்
உன் மூச்சின் அவசியம் மறந்துவிடும்
விலகினால் போதும் என்று விடை எடுப்பாய்
சுய முயற்சியில் உயிரை மாய்ப்பாய்
இறுதியில் கடிதம் உன் குரல் கூறும்
கருவை பெற்றவள் கதறி அழுவாள்
கருவை காத்தவன் கண்ணீர் சுரப்பான்
நீ மட்டும் கனவோடு வாழ்ந்திருப்பாய்
உன் இஷ்டப்பட்டவர் உனக்கிழைத்ததை
உன்மேல் அன்பானவருக்கு நீ இழைப்பாய்
இந்த முயற்சியில் முதல் வெற்றியும் பெறுவாய்
......

Arumai sago
ReplyDelete