பெண்ணின் வெற்றிக்குப்பின்னாலே நிச்சயமாக ஆண் இருக்கவேண்டும்


பெண்ணின் வெற்றிக்குப்பின்னாலே நிச்சயமாக ஆண் இருக்கவேண்டும்

மகளிர் தின விழாவில் பி.சுசீலா பேச்சு









மார்ச் 8

சென்னைப்பல்கலைக்கழகத்தில் நடந்த உலக மகளிர் தின சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட பாடகி பி.சுசீலா அவர்கள் பேசுகையில் ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப்பின்னும் ஆண் கண்டிப்பாக இருப்பான் , அது அண்ணனாகவோ இல்லை , அப்பாவாகவோ இருக்கலாம். ஆணின் வழிகாட்டல் பெண்ணுக்கு அவசியம் என்று கூறினார்.

3 ஆவது முறையாக சென்னைப்பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழா 11 மணியளவில் ஆரம்பித்தது. சிறப்பு விருந்தினராக பாடகி பி.சுசீலா அழைக்கப்பட்டிருந்தார். துணைவேந்தர் திருவாசகம் அவர்களின் சிறப்பு உரையில் 60 ,௦௦௦ பாடல்கள் மேல் பாடிய பாடகி சுசீலாவின் தீவிர ரசிகர் எனவும் அவர் பாடிய தமிழ்த்தாய் வாழ்த்தை ஒவ்வொரு நிகழ்ச்சியின் ஆரம்பத்திலும் பாடப்படுவதை பெருமையாக கருதுவதாக கூறினார். சென்னையில் ஆண்களுக்கு நிகராக சாதித்த ஐந்து பெண்கள்; கப்டன் தீபா நாயர் [விமானி,எயார் இந்தியா] , மீனாட்சி விஜயகுமார் [ முதல் பெண் தீயணைப்புத்துறை அதிகாரி] கே.கே.லிஜி [மோட்டார் பெர்சன், ரயில்வே], ஜோதி கமலாபாய் [பெண் பேருந்து ஓட்டுனர்], மேஜர்.லீலா பஜாஜ் [பெண் மிலிட்டரி பயிற்றுனர்ஆகியோர் சிறப்பித்து கௌரவிக்கப்பட்டனர். பெண்ணினத்துக்கு பெருமை சேர்த்த அன்னை தெரேசா, ராணி மங்கம்மா, ஜான்சி ராணி, கஸ்துரிபாய், சரோஜினி நாயுடு, கல்ப்பனா சாவ்லா, இந்திரா காந்தி ஆகியோர் நினைவுகூறப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து பெண்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதற்கு நடுவர்களாக திருமதி காஞ்சனா ஜெனார்த்தனன் [மயூரா நடனப்பள்ளி] , சுபா நடேஸ்வரர் [குரல் வள பயிற்றுனர்] , நடிகை அக் ஷயா ஆகியோர் அழைக்கப்படிருந்தனர். நிகழ்ச்சியில் முதல் பரிசை தொல்காப்பியர் வளாக பல்கலைக்கழகமும் இரண்டாவது இடத்தை எம்.ஜி.ஆர்.ஜானகி கல்லூரியும் வென்றன. பரிசில் வழங்கலுடன் விழா இனிதே நிறைவேறியது.

- நான் -

Comments

Popular posts from this blog

Bommarillu - Love makes life beautiful -