கலாட்டா with கார்த்திக்


கலாட்டா with  கார்த்திக்


கல்லுரி நண்பன் கார்த்திக் உடன் ஒரு சந்திப்பு 



"கலாய்க்காதடா, என்னையாட இன்டர்வியு பண்ணப்போறஎன்ற கேள்வியோடு ஆரம்பமானது கார்த்திக்குடனான சந்திப்பு. சார் பிறந்தது கும்பகோணத்தில இருக்கிற வீரசோழபுரம். அப்பா முருகன், பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பவர். சார் சின்னவயசில செய்யாத சேட்டை இல்லை, குட்டி ரவுடினே சொல்லலாம். இவருக்கு சின்ன வயசில பைலேட் ஆகணும்னு ஆசை.
 சாருக்கு கோலி ஆடுறதினா உயிர். வாலிபால், கொக்கோ, துரோபால் எல்லாம் ஸ்கூல் லெவெல்ல ஆடியிருக்காரு. பைக் ரேசிங்ல கிங். காலேஜ் படிக்கிறப்போ டூர் போனதால வயநாடு, கோழிக்கோடுனா கொஞ்சம் இஷ்டம். விஸ்காம் படிச்சதால போட்டோகிரபி, குறும்படம்னு பல இடம் சுத்தியிருக்கிறது மட்டுமல்லாமல் "சுனாமி" னு ஒரு குறும்படம் பண்ணியிருக்காரு. 3dx max  சாப்ட்வேர் பலே கில்லாடி.
விஜய் டிவினா, டிவி முன்னாடியே உட்காந்திடுவாரு. கனா காணும் காலங்கள், கலக்கபோவது யாரு, நீயா நானானு இவரோட பேவரிட்ட அடுக்கிட்டே போகலாம். விஜய் படம் னா மிஸ் பண்ணாம பார்த்திடுவாரு. என்னதான் பி.ஜி படிச்சிட்டு இருந்தாலும் குழந்த மாதிரியே மழையில நனையிறது, மீன் வளர்க்கிறது, நாய் கூட விளையாடுறதுனு சின்ன சின்ன ஆசைகள் நிறைய வச்சிருக்காரு. பத்தாவது படிக்கும்போது இருந்த  மலர்விழி டீச்சர மறக்கவே முடியாது, அவங்க இவருக்கு நிறைய உதவி படிப்பிலும் சரி துறைசார்ந்த வேலைகளிலும் சரி நிறைய உதவியா இருந்திருக்காங்க.

சாருக்கு இப்போ பெரிய பிஸ்னெஸ்மானா வரணும்னுதான் ஆசை. அம்பானி மாதிரியெல்லாம் இல்லாம புதுமாதிரியான ஸ்டைல்ல ஆகணுமாம். அவர் கனவு நனவாக வாழ்த்துக்களுடன் விடைபெற்றேன்.

- நான் -

Comments

Popular posts from this blog

Bommarillu - Love makes life beautiful -