எத்தனை மனிதர்கள்


எத்தனை மனிதர்கள்






திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஒரு எட்டு வயது மதிக்கத்தக்க சிறுவன். தாய் தந்தையரை இழந்து அவனது பாட்டியுடன் தங்கிவரும் அவனது முழுநேரத்தொழில் பிச்சை எடுப்பது. வேகமாக செல்லும் வாகனங்களின் நடுவே பயமின்றி வீதியை கடக்கின்றான். அவனது பேச்சும் செயலும் வழக்கமான பிச்சை எடுப்பவர்கள் போல் இல்லை. அவன்  பிச்சை கேட்போரின் உருவம் தராதரம் அறிந்து அவர்களை புகழ்ந்து பிச்சை கேட்கிறான். அவன் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் பார்ப்பவர்களை எளிதில் கவர்ந்துவிடும்.

அவனைப்பற்றி விசாரித்தபோது தனது பெயர் முத்துக்குமார் என்றும் தனது தந்தையின் முதல் எழுத்து "M" என்றும் பெருமையாக கூறுகிறான். அவனது பாட்டியும் பிச்சைதான் எடுப்பதாகவும், பள்ளிக்கு இதுவரை சென்றதில்லை எனவும் கூறுகிறான். ஆனாலும் நடிகர் விஜயின் தீவிர ரசிகனாம். அவரது திரைப்பட வசனங்களை அப்படியே ஒப்பிகிறான். நடனத்திலும் வெழுத்து வாங்குகிறான்.
                                                                                                                                                                            

அவனை சந்தித்த நிமிடங்கள் சிறிது சுவாரசியமாய் இருந்தது. இன்னும் 

இவனைப்போல் எத்தனை மனிதர்கள் நடமாடிக்கொண்டுதான் 

இருக்கிறார்கள்... 


-அருண்-

Comments

Popular posts from this blog

Bommarillu - Love makes life beautiful -