“ த ப்ளெஷர் பாய் கொமோலா ”
“ த ப்ளெஷர் பாய் கொமோலா ”
ஆண்டு: 2012
நாடு:பங்களாதேஷ்
இயக்கம்: ஹிமாயுன் அஹமது
சமூக ஏற்றத்தாழ்வினால் கீழ்மட்ட மக்கள் படும் துன்பத்தை நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜமிந்தார்களின் தவறான வாழ்க்கைமுறையினைக்கொண்டு சித்தரிக்கப்படிருக்கும் படம்தான் " த ப்ளெஷர் பாய் கொமோலா "
வங்காளதேசத்தில் ஒரு ஜமிந்தாரின் நகர் அது. அந்த நகரின் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து இருக்கின்றது. அந்த ஜமிந்தாரிடம் ஒருஇசைக்குழு வருகின்றது. அந்த ஆற்றின் நீர் வடியும்வரை அந்த இசைக்குழு ஜமிந்தாரை சந்தோசப்படுத்தவேண்டியது கடமை. படகுமூலமாக வந்துகொண்டிருக்கும் அந்த இசைக்குழு, ஜமிந்தார் தமக்கு நிறைய பொன், பொருள், உணவு எல்லாம் தருவார் என்று பேசியபடிநடனத்திற்கு ஒத்திகை பார்த்தபடி வருகின்றனர். அந்த இசைக்குழுவில் இருக்கும் பதின் வயத்துப்பையன்தான் கொமோலா. அவர்கள்நதிக்கரையில் இருக்கும் ஜமிந்தார் அரண்மனையை வந்தடைகின்றனர். அங்கு அவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கின்றது.அன்று மாலை கொமோலா பெண்வேடமிட்டு அரண்மனையை தனது நடனம் மூலமாக அலங்கரிக்கின்றான். நடனத்தை பார்க்கும் ஜமிந்தார்நடனப்பயிற்சியாளரை அழைத்து குறைகளை நிவர்த்திசெய்ய சொல்கிறார். இரவு பெண் வேடமிட்ட கொமோலா ஜமிந்தாரின் படுக்கைக்குஅழைக்கப்படுகின்றான். அன்றிரவு ஜமிந்தாரணியால் உறங்கமுடியவில்லை. அடுத்தநாள் ஜமிந்தாரிடம் அந்த இசைக்குழுவைத்திருப்பியனுப்புமாறு கூற ஜமிந்தார் மறுக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஜமிந்தாரணி கொமோலாவை கொலை செய்ய திட்டம்தீட்டுகிறார். இறுதியில் கொமோலா என்ன ஆனான் என்பதுதை ஒருமுறை படத்தை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
தான் என்ன செய்யப்போகின்றோம் என்று கூட தெரியாமல் கவலைப்படாமல் வீட்டைவிட்டு புறப்படும் கொமொலாவின் கதாப்பாத்திரம்,அவனது அம்மா அதற்காக கவலைப்படுவதும், வறுமையை சமாளிக்க தவறு என்று தெரிந்தும் பையனை ஜமிந்தாரிடம் சேர்க்கும் அப்பா,இசைக்குழுவின் உறுப்பினர்கள், ஜமிந்தாரை வரையும் ஓவியர், ஜமிந்தார், ஜமிந்தாரணி, வேலைக்காரி என்று அனைத்துகதாப்பாத்திரங்களின் நடிப்பும் காட்சியமைப்பும் அப்படியே மனதோடு பதிந்து போகிறது. முதல்நாள் இரவில் ஜமிந்தாரால் பாலியல் அவஸ்தையில் வலியுற்று தந்தையின் மடியில் அழுதுகொண்டிருக்கின்றான் கொமோலா.அப்போது இசைக்குழுவின் நடன பயிற்சியாளர் அவன் அழுகையை சமாதானப்படுத்த தொடுகையில், கொமோலா பயந்து கைகளை தட்டிவிடும் காட்சி அந்த சிறிய வயதில் அவன் அனுபவித்த கொடுமையின் ஆழத்தையும், பயிற்சியாலனும் சிறிய வயதில் இதைஅனுபவித்தவன்தான் என்று கண்கலங்கி கூறுகையில் அந்த காலகட்ட கொடூர நம்பிக்கையை கண்முன் நிறுத்துகிறார் இயக்குனர்.
ஜமிந்தாரின் பெண்குழந்தை கொமொலாவிடம் பழகும்விதம் குழந்தைகளது வெள்ளை மனதினையும்; அரண்மனையில் நடந்துவரும்கொடுமையைக்கண்டு வெறுப்படையும் ஓவியர், கொமொலாவின் குழந்தை மனதிப்புரிந்த ஒரு மனிதராக சித்தரித்து அமைக்கவும்பட்டிருக்கிறது. மழையில் கொமொலாவை நனைய வைத்து சந்தோசமடைய செய்வதும், தான் செய்த சிற்பத்தை கொமொலாவிற்குகொடுத்தல் என்று ஓவியரின் கதாப்பாத்ரப் படைப்பு சிறப்பாக உள்ளது.
மதத்தின் கட்டுப்பாட்டினை குழந்தைக்கு பழக்குவதும், காமம் என்று வருகின்றபோது மதம் மறுக்கப்படுவதும், செல்வத்தினைக் கொடுத்துவேலைக்காரியை தப்புசெய்ய ஊக்குவிப்பதும், குதிரை வழர்ப்பவனின் காம மனநிலையும், சமூக ஏற்றத்தாழ்வின் கொடூரங்களையும்சரிவர விழக்குகிறது இந்த திரைப்படம். ஜமிந்தாரணியின் வளையலை வேலைக்காரி வைத்திருப்பதைக்கொண்டு தவறு செய்தது யார் என்பதை கண்டறிகிறார் ஜமிந்தார். இதற்குதீர்ப்பு சொல்ல இயலாது செல்வத்தை அள்ளி வழங்கும் காட்சியிலும் இயக்குனரின் காட்சிப்படுத்தும் திறனும் தெரிகின்றது.
பல சமூக கருத்துக்களை ஒன்றாக சொல்லியிருக்கும் படமான " த ப்ளெஷர் பாய் கொமோலா " 2012 ஆம் ஆண்டு ஆஸ்கருக்குஅனுப்பிவைக்கப்பட்ட பங்களாதேஷ் திரைப்படம் மட்டுமல்லாது அக்கெடமி விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டது.


Comments
Post a Comment