அவளுக்காக ஒரு வேண்டுதல்...
அவளுக்காக ஒரு வேண்டுதல்...
முதல் பார்வையில் பூத்த காதலை
வாடாமல் வளர்க்க ஆசைப்பட்டேன்
நட்புக்கன்றை அவள் நீட்ட
உரமாக்கினேன் என் முதல் பூவை...
காலம் பல ஓடியதும்
காதல் அவளுக்குள்ளும் ஊறியது
உரமாக நானிட்ட காதல்
மரமாகிப்போனது அவள் மனதில்...
ஊர்க்காதல் கதிகண்டு
உறங்கிப்போனது எந்தன் பசி
காதல் என்றால் சிறை என்று
பதிவாகிப்போனது எந்தன் விதி...
காதல் பசியினைபார்த்தே
பயந்துபோன எனக்கு
காதல் கனிகளுடன்
வரவேற்றது சோலை...
அவள் காதல் கனி நீட்ட
பசியில்லை என நான்கூற
உற்றார்மீது எனக்கு காதல் – என்று
ஊமையாக சாபமிட்டாள்...
என்ன நிலமை உனக்கும் வரும்
அப்போது வலிதெரியும்
நட்புக்கூட நமக்குள் வேண்டாம்
எட்ட நின்று ஏமாந்துபோ என்றாள்...
பாவம் அவள் மனது
பல ஆண்டு காதல் இல்லையா
அவளின் அடுத்த மரமாவது தோப்பாக
அவளுக்காக ஒரு வேண்டுதல்...
-நீங்கள் -

Ajo ajo ajo chancea illa. super..
ReplyDeletetrue feelings ..i think many would have faced this..
ReplyDeleteoh ho ;)
Delete