9 ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா




9 ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா








இந்திய திரைப்பட திறனாய்வுக் கழகத்தினால் [ICAF] 2003 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சென்னை சர்வதேச திரைப்படவிழா  [CIFF] கடந்த ஆண்டு மார்கழி  2011 ல் தனது ஆவது ஆண்டினை பூர்த்திசெய்தது. மார்கழி 14  ஆம் திகதியிலிருந்து 22  ஆம் திகதி வரை நடைபெற்ற இந்த விழாவில் 53  நாடுகளிருந்து 156  திரைப்படங்கள் ; உட்லண்ட்ஸ், சிம்பனி உட்லண்ட்ஸ், சத்யம், ஐநாக்ஸ் மற்றும் திரைப்பட சங்கம் ஆகிய ஐந்து திரைகளில் திரையிடப்பட்டன.



விழாவின் சுவாரசிய சம்பவங்கள்.


ஆரம்ப நாள்


·         நடிகர் இயக்குனர் ரா.பார்த்திபன் , நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விழா ஆரம்பமானது.

·         நடிகைகள் தன்ஷிகா, கார்த்திகா, ப்ரியா ஆனந்த் மங்கள விளக்கேற்றினர்.

·         செய்தித்துறை அமைச்சர் திரு கே.டி. ராஜேந்திர பாலாஜி சிறப்பு விருந்தினராக அழைக்கப்படிருந்தார்.

·         80 வருடகால தமிழ் சினிமாவின் கருப்பு வெள்ளையிலிருந்து, கொலைவெறி வரையான இசைக்கோர்வையும்  அதற்கான நடனமும் அரங்கேறியது.

·         6 இடங்களில் திரையிடப்பட்டு 2 விருதுகளை வாங்கிய "செங்கடல்" திரைப்படம் திர்யிடாமல் தண்ணிக்கை செய்ததை எதிர்த்து அந்த படம் சம்பந்தப்பட்டவர்கள் கோஷம் எழுப்பினர். விழா சிறிதுநேரம் சலசலப்பானது.

·         குறிப்பிட்ட தொகைப்பணம் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களால் வழங்கப்பட்டது.

·         தமிழ் திரைப்படத்திற்கான விருது தெரிவுசெய்யும் நீதிபதிகள் திரு.மதன், திரு.பிரதாப் போத்தன், திருமதி.ரோகினி ஆகியோர் அறிமுகம் செய்யப்பட்டனர்.

·         விழா கூட்டத்திற்கு வெளியே "செங்கடல்" திரைப்பட இயக்குனர் திருமதி.லீனா மணிமேகலை " இந்த படத்தில் இலங்கை அகதிகள் மற்றும் இந்திய மீனவர்கள் கொல்லப்படுவது தொடர்பான கதை பற்றி சொல்லியிருப்பதாலும், அரசியலின் உண்மையை கூறியிருப்பதாலும் இதனை தடைசெய்து இருக்கிறார்கள்", "இந்தியன் பனோரமா பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட  ஒரே படம் , இந்த படம் கண்டிப்பாக திரையிடவேண்டும்" என்றும் தெரிவித்தார்.

·         பெயர்குறிப்பிட விரும்பாத ஒருநபர் " இன்னொருவர் குழந்தைக்கு தன பெயரை அப்பா என சேர்ப்பதுபோல் இங்கு தெய்வத்திருமகள் மற்றும் முரண் ஆகிய இரண்டு திரைப்படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன, இதனால் இந்த விழா பற்றிய தவறான எண்ணங்கள் வெளிநாட்டவரிடம் தோன்றும்" என்று கூறியிருந்தார்.



v  விழாவின் 3 ஆம் நாள்  சத்யம் திரையரங்கில் பல பார்வையாளர்களை உள்ளே அனுமதிக்காததையடுத்து சிறிய வாக்குவாதம் இடம்பெற்றது. இதனால் இதற்க்கு அடுத்தநாள் உட்லாண்ட்ஸ் திரையரங்கிலும் போலீசார்  நிறுத்தப்பட்டனர்.

v  தமிழ்ப்படங்களான "செங்கடல்", "தென்மேற்கு பருவக்காற்று" படங்கள் திரையிடப்படும் படங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டன. முன்னதாக ஆடுகளம், அவன் இவன், அழகர்சாமியின் குதிரை, தெய்வத்திருமகள், முரண், எங்கேயும் எப்போதும், கோ, மைதானம், தூந்காநகரம், வாகைசூடவா, வர்ணம், வெங்காயம், புத்திரன் ஆகிய படங்கள் பட்டியலில் இருந்தன.



விழாவின் இறுதிநாள்


·       பொய்க்கால் குதிரை ஆட்டத்துடன் ஆரம்பமானது.

·   நடிகர் பிரசன்னா மற்றும் தொகுப்பாளினி ரம்யா நிகழ்ச்சியை  ஒருங்கிணைத்தனர்.

·       புல்லாங்குழல் வித்துவானின் இசைக்கோர்வை இடம்பெற்றது.



விருதுகள்

·         சிறந்த தொடர் விமர்சனம்: சுரேன் [ பார்வையாளர்]

·         சிறப்பு விருது : பாஸ்கர் சக்தி [அழகர்சாமியின் குதிரை கதை]

·         2 ஆம் இடம்: வாகைசூடவா

·         1 ஆம் இடம்: ஆடுகளம்


·         பின்லாந்து படமான லே ஹாவ்ரே படத்துடன் விழா இனிதே நிறைவடைந்தது.

- நான் -



 

Comments

Popular posts from this blog

Bommarillu - Love makes life beautiful -