9 ஆவது சென்னை உலக திரைப்பட விழாவில் என்னை திருடிய திரைப்படம்...



9 ஆவது சென்னை உலக திரைப்பட விழாவில் என்னை திருடிய திரைப்படம்...








படம் - மலைகளின் வர்ணங்கள்

இயக்குனர்  – கார்லோஸ்  சீசர் ஆர்பெலஸ்

நாடு - கொலம்பியா

மொழி -ஸ்பானிஷ் 



போர் பற்றி எதுவுமே அறிந்திராத குழந்தைப்பருவத்தில், அக்காலங்களில் குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை பிரதிபலித்திருக்கும் படம்தான் இந்த "மலைகளின் வர்ணங்கள்" [THE COLOURS OF THE MOUNTAIN]

மனுவல் என்ற சிறுவன் கொலம்பியாவில் ஒரு கிராமத்தில் வசித்துவருகிறான். அவனுக்கு கால் பந்து வீரனாக வரவேண்டும் என்று ஆசை. கிழிந்துபோயிருக்கும் பந்தை வைத்து விளையாடிக்கொண்டிருக்கும் மனுவலுக்கு அவன் தந்தை பிறந்த நாள் பரிசாக ஒரு புதிய கால்பந்தை கொடுக்கிறார். அந்த பந்து ஒருதடவை விளையாடுகையில் கண்ணிவெடி புதைக்கப்ட்டிருகும் நிலத்தில் விழுந்துவிடுகிறது...

இதற்கிடையில் குடும்பத்தின் ஆண்களை கொன்று, பெண்களை வல்லுறவுக்கு உட்ட்படுத்திவரும் இராணுவத்திடம் மனுவலின் தந்தை, தாய், ஆசிரியர் இரையாகின்றனர். இதுபற்றி ஏதும் அறிந்திராத மனுவெலிற்கு அந்த கால்பந்தை எடுக்கவேண்டும் என்ற ஆர்வமே இருக்கின்றது. இறுதியில் அந்த பந்து அவனுக்கு கிடைத்ததா இல்லையா என்பதை ஒருமுறை படம்பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்..

திருட்டுத்தனமாக தனது நண்பன் ஜூலியனை கால்பந்து விளையாட அழைத்துசெல்வதுபோல அமைத்து மனுவலுக்கு கால்பந்து மீதுள்ள ஆசையை முதல் காட்சியிலேயே சொல்லியிருப்பது சிறப்பு.

கால்பந்து விளையாடும் இடத்தில் இராணுவம் நிற்க அவர்களுக்கு சத்தம் கேட்காத வகையில் சிறுவர்கள் விளையாட எத்தனிப்பது, குழந்தைகள் எப்படி சிந்திப்பார்கள் என்பதை கூறுகிறார் இயக்குனர்.

எதற்கும் பயந்துகொண்டே இருக்கும் மனுவலின் இன்னொரு நண்பன் கண்ணாடி அணிந்த சிறுவனின் கதாப்பாத்திரம் கடுமையான நேரத்திலும் சிரிப்பைமூட்டுகிறது. உயரத்தின் அடிப்படையில்ஆளைத்தெரிவு செய்வது குழந்தைகளை பொறுத்தவரை வழக்கம். உயரம் குறைந்த அந்த கண்ணாடி போட்ட சிறுவன் பந்தை எடுக்க படும்பாடுகள் குழந்தைகளின் குறும்புக்கு உதாரணம். அப்போது அவன் கண்ணாடி அங்கே தவறி விழுவது உச்சக்கட்ட நகைச்சுவை.

போரினால் பிரிந்துசெல்லும் மனுவலின் ஒருநாள் பெண்தோழி...
பள்ளி  சுவரில் இராணுவம் எழுதிய வாசகங்களை குழந்தைகள் வரையும் ஓவியங்கள் மூலம் அழித்து அதற்காக கொடுமையை அனுபவித்து ஊரை விட்டு செல்லும் ஆசிரியர் ...
அப்பா இல்லாத வேளையில் தன் பிள்ளைகளை அழைத்து தப்பிக்க நினைக்கும் மனுவலின் அம்மா என அனைவரும் மனதில் அமர்ந்துவிடுகிறார்கள்.

இறுதிவரை அப்பா இறந்தவிடயம் தெரியாமல் மனுவல் ஊரைவிட்டு செல்கிறான். இதற்க்கு, தாய் ஊரைவிட்டு செல்ல முயலும் காட்சியினை முன்னதாக அமைத்திருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம்.
கற்களை போட்டு வெடிக்கின்றத என பார்த்து அந்த இடங்களில் கால் வைத்து பந்தை எடுக்க மனுவல் முயற்சிக்கும் காட்சி பார்வையாளர்களை இருக்காய் நுனிவரை செல்லவைக்கின்றது.

போர்ச்சுழலில் நான் பார்த்து அனுபவித்த காட்சிகளாலும், குழந்தைகளின் மனநிலையை சரியாக பதிவுசெய்திருக்கும் விதத்திலும்  இந்த "மலைகளின் வர்ணம்" என்ற திரைப்படம் என் மனதை களவாடிப்போனது. 

- நான் -  

Comments

  1. அருமை.. ஆனால் படம்பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டு நீயே இறுதியை சொல்லிவிட்டாய்..

    ReplyDelete
  2. பந்து அவனுக்கு கிடைத்ததா என்பதை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறேன்.. நன்றாக ஒருமுறை படியுங்கள்

    panthu avanukku kidaiththathaa enpathai paarththu therinthukollunkal enru solliyirukkiren.. nanaaka orumurai padiyunkal

    ReplyDelete
  3. பந்திற்காக அந்த சிறுவன் கல்லை போட்டு பார்த்து சென்றான் என்று கூறி இருக்கிறாய்.. நீயே படி..

    ReplyDelete
  4. muyarchi seithaan enruthaane solliyirukiren

    ReplyDelete
  5. அதை புரிந்து கொள்ளாத அளவிற்கு ஆடியன்ஸ் என்ன முட்டாலா??

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Bommarillu - Love makes life beautiful -